/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/127_21.jpg)
தமிழில் சினிமாவில் 'அபியின் நானும்', 'சர்வம் தாளமயம்', 'ஜெய் பீம்', 'விக்ரம்' உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் இளங்கோ குமரவேல். நடிப்பு மற்றும் எழுத்துத்துறையில் பயணிக்கும் இவர் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற 'பொன்னியின் செல்வன்' படத்தில் மணிரத்னத்துடன் இணைந்து திரைக்கதை பணியில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை அசோக் நகரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வரும் இளங்கோ குமரவேல், தனது செல்போன் மர்ம நபர்களால் பறிபோனதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது பணிகளை முடித்துவிட்டு நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் வீடு திரும்பிய இளங்கோ குமரவேலிடம், அடையாளம் தெரியாத இரு நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து அவரது செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இளங்கோ குமரவேல் அளித்த புகாரின் பேரில் பட்டினப்பாக்கம் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிவிசாரணை நடத்தி வருவதாகத்தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)